எறையூர் சர்க்கரை ஆலையில் ஒரு நாளைக்கு 60,000 லிட்டர் எத்தனால் தயாரிக்க ஆய்வு-ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்

பெரம்பலூர் : பெரம்பலூர் எறையூர் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை க்கூட்டம் நேற்று (31ம்தேதி) காலை 11மணிக்கு தலை மை நிர்வாகி ரமேஷ் தலை மையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கரும்புபெரு க்க அலுவலர் ஆனந்தன், துணைத் தலைமை பெரியசாமி, துணைத் தலைமைப் பொறியாளர் தங்கவேல் , கணக்கு அலு வலர் ஜான்பிரிட்டோ, தொ ழிலாளர் நலஅலுவலர் தன்ராஜ், மற்றும் பொறியியல் , ரசாயணப்பிரிவு, கரும்பு அபிவிருத்தி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ஞா னமூர்த்தி, பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலை வர் சீனிவாசன், காங்கிரஸ் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பெருமாள், தமிழ் நாடு கரும்பு உற்பத்தியா ளர்கள் சங்க மாவட்ட தலை வர் சக்திவேல், பங்குத்தார ர்கள் சங்கத் தலைவர் ராம லிங்கம், நடேசன், முருகே சன், சன்னாசிநல்லூர் பச்ச முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது:

2022-2023ம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு இதுவரை 2,40,000 டன் அரைக்கப்படுள்ளது. இன்னும் 1,08,000 ம் டன் அரைக்க வேண்டியுள் ளது. இன்றைய ரெக்கவரி (சர்க்கரை சத்து) 10.26சத வீதம். சராசரி ரெக்கவரி 9.86 சதவீதம் ஆகும். மே மாதம் 8ம் தேதிவரை ஆலையில் கரும்புஅரைப்பதாக முடிவெடுக்கப்பள்ளது. இதுவரை 8,000 ஏக்கர் கரும்பு பதியப்பட்டுள்ளது. மேலும் 4,500 முதல் 5000 ஏக்கர் வரை பதிய திட்டமிட்டுள்ளோம். 2023 மார்ச் 29ம் தேதிவரை அரைத்த சர்க்கரை 2,38,670குவிண் டால். இதன் மதிப்பு ரூ. 67 கோடியே 16 லட்சம். 2023 மார்ச் 22ம்தேதிவரை வெட்டிய கரும்புக்கு ரூ.62 கோடி கொடுக்கப்படுள்ளது.

சர்க்கரை ஆலையில் 2,19,6 29 குவிண்டால் சர்க்கரை இருப்பு உள்ளது. 10,532 டன் மொலாசஸ் இருப்புள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ10 கோடி ஆகும். அமராவதிக்கு மொலாசஸ் கொடுத்த வகையில் ரூ. 36 லட்சம் வந்துள்ளது. சேலம் கூட் டுறவு சர்க்கரை ஆலைக்கு மொலாசஸ் கொடுத்ததில் ரூ1 கோடியே 62 லட்சம் வந் துள்ளது. இந்த ஆண்டு 38, 860 டன் சர்க்கரையை ரூ14 கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளோம்.

எத்தனால் உற்ப த்தி செய்வதற்கான திட்ட மிடலுக்கு 2வது ஆய்வுக் கமிட்டி வந்து ஆய்வுசெய்து சென்றுள்ளனர். மொலா சஸ், மக்காச்சோளம், மற் றும் அரிசியில் இருந்து எத் தனால் எடுக்க திட்டமிடப்ப ட்டுள்ளது. ஒரு நாளைக்கு 60,000 லிட்டர் எத்தனால் தயாரிக்க ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இணைமின் உற்பத்தி ஒரு நாளைக்கு 12 மெ காவாட் உற்பத்தி செய்யப் படுகிறது.

கூட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவர்கள் தரப்பில் தெரிவித்ததாவது :

2022-2023ம் ஆண்டு அர வைப்பருவத்தில் ஆலை யை திறமையாக இயக்கி, ரெக்கவரி கூடுவதற்கும், ஓரளவிற்க்கு இடைநில்லா மல் இயக்கிதற்க்கும், தாம தம் இல்லாமல் கரும்பு விவ சாயிகளுக்கு பணம் வழங் கியதற்கும் கரும்புவிவசா யிகள் சார்பில் நன்றியை யும் பாராட்டுதலையும்தெரி விக்கப்பட்டது. விவசாயிக ளுக்கு தனி நிதிநிலை அறி க்கையை சட்டமன்றத்தில் அறிவித்த தோடு, ரூ1500 கோடி வட்டியில்லா கடனும், ரூ.14,000கோடி குறைந்த வட் டியுடன் கூடிய கடனும் வழங்கப்படும் என அறிவித்த தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சருக்கு நன் றியையும், பாராட்டுதலை யும் தெறிவிக்கப்பட்டது. ஆலை வளாகத்தில் சிமெ ண்ட் தளம் அமைக்க சுமார் ரூ.27 லட்சம் அனுமதி வழங்கியதற்கும் அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கரும்புக்கு கூடுதலாக சிறப்பு ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. வெளி ஆலைகளுக்கு அனுப்பப்படும் கரும்புகளுக்கு கரும்புக்கான தொகையை தாமதமில்லாமல் அனுப்பப்படும் ஆலையை எதிற்பார்க்காமல் பெரம்ப லூர் சர்க்கரைஆலைநிர்வாகமே வழங்கிட வேண்டும்.வெட்டிய கரும்பு ஆலை வளாகத்தில் 2 நாளைக்குமேல் காய்வதாகவும், இறக்கி விட்டு வருவதற்கு 3 நாள்ஆகி றது எனவும் கூறப்படுகிற து. இதனால் ரெக்கவரி குறைய வாய்ப்புள்ளது.

மேலும் கரும்பு விவசாயிகள், வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தேவைக்கேற்ப மட்டுமே கரும்பை வெட்ட அனுமதி அளிக்க வேண்டும். மின்உற்பத்தியை 12 மெகாவாட்டில் இருந்து 15 மெகாவாட் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்காலிக பணியாளர்கள் தேவைக்கேற்ப மட்டுமே நியமனம் செய்யவேண்டும் எனவும், தேவையற்ற பணியாளர்களை நியமிக்க வேண்டாம் எனவு தெரிவிக்கப்பட்டது.

Related Stories: