வால்பாறை : வால்பாறை டவுனில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், சிறுத்தை அப்பகுதியில் முகாமிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் குடியேறி உள்ள காட்டுப்பன்றிகள், வி.ஓ.சி நகர், இந்திரா நகர், வாழைத்தோட்டம், ராஜீவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வலம் வருகிறது. பள்ளி நேரங்களில் சாலையில் ஒய்யாரமாய் நடந்து போஸ் கொடுத்து செல்லும் பன்றிகளால் பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.