மது போதையில் கத்தியால் அண்ணியை தாக்கிய மைத்துனர் கைது

ஆவடி: ஆவடி திருவள்ளுவர் நகர் பகுதியை  சேர்ந்தவர் சுகன்யா(32). இவரது கணவர் வருண்(40).  கூலி தொழிலாளி. இவரது தம்பி  குரு சத்தியா(29). கூலி தொழிலாளி.  இந்நிலையில், கடந்த 16ம் தேதி மைத்துனரான  குரு சத்தியா வழக்கம் போல்  மதுபோதையில் அண்ணியின் வீட்டிற்கு வந்துள்ளார்.  அப்போது, இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த சத்தியா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அண்ணியின் கை மற்றும் காலில் வெட்டினார். இதில், காயம் ஏற்பட்ட சுகன்யாவிற்கு வலியால் துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். எனவே, சத்தியா அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

சுகன்யாவை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து ஆவடி காவல் நிலையத்தில் சுகன்யா  புகார் கொடுத்தார். போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், மார்க்கெட் பகுதியில் குரு சத்தியா பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் சுற்றி வளைத்து அவரை பிடித்தனர். விசாரணைக்கு பின், அவரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: