ஏரி காத்த ராமர் கோயில் வெள்ளி தேரோட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் ஸ்ரீ ஏரிகாத்த ராமர் என்கிற கோதண்ட ராமர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ ராமநவமி உற்சவ விழா கடந்த 21ம் தேதி செவ்வாய் அன்று தொடங்கி தினமும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள், நிகழ்ச்சிகள் கோயிலில் நடைபெற்று வருகிறது. தினமும் காலை வேளைகளில் விசேஷ அலங்காரம், திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து வித்வான்களின் உபன்யாசம், கச்சேரிகள் நடைபெற்றன. மேலும், மூலவர் முத்தங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளி தேரோட்டம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. வெள்ளி தேரில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளி வீதிஉலா சென்று ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயில் விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லஷ்மிகாந்தன் பாரதிதாசன், செயல் அலுவலர் மேகவண்ணன், ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: