கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் செயின் பறிப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லூர் கிராமம் மாதவபெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சாந்தி (30). இவர், நேற்று முன்தினம் மாலை நத்தாநல்லூரில் இருந்து புளியம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள ஆரம்பப்பள்ளி அருகாமையில் நடந்து சென்றார். அப்போது பைக்கில், ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள், சாந்தியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, கழுத்தில் இருந்த 7 சவரன் தாலி சங்கிலியை அறுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர்.

இதனால், அதிர்ச்சியடைந்த சாந்தி, கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடியபோது, எந்த வழியாக சென்றனர் என்பது தெரியவில்லை. பின்னர், இதுகுறித்து வாலாஜாபாத் போலீசாாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கத்திமுனையில் செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: