மாணவர்கள் நலன் கருதி சீரான மின்சாரம் வழங்க கோவளத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்: திருப்போரூர் எம்எல்ஏ வலியுறுத்தல்

திருப்போரூர்: மாணவர்கள் நலன் கருதி சீரான மின்சாரம் அளிக்கும் வகையில் கோவளத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் திருப்போரூர்  எஸ்.எஸ்.பாலாஜி வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி (விசிக) பேசியதாவது: கோவளத்தில் அமைந்துள்ள  அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 800 மாணவர்கள் படிக்கிறார்கள்.  

அந்த  பள்ளிக்குச் செல்லக்கூடிய மின்சாரம் சீராக இல்லை என்கின்ற நிலையில் அங்கே  ஒரு மின்மாற்றி டிரான்ஸ்பார்மர் அமைத்து தர அமைச்சர் முன்வருவாரா? என்றார். இதற்கு பதில் அளித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், ‘சுட்டிக்காட்டிய பகுதிகளில் எங்களுடைய துறையின்  அலுவலர்களை அனுப்பி நேரில் ஆய்வு செய்கிறோம். தேவை ஏற்படின் நிச்சயமாக  ஒருவார காலத்திற்குள் அதை மாற்றுவதற்கு துறை நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.

Related Stories: