மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டர் உத்தரவு

சென்னை: மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்.4ம் தேதி சென்னையில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட கலெக்டர் அமிர்த ஜோதி உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்.4ம் தேதி (செவ்வாய்கிழமை) மஹாவீர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு  தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள், தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி விதிகள் ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட ஹோட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் அனைத்து உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக முடப்பட வேண்டும். அரசு உத்தரவை மீறி, ஏப்.4ம் தேதி (செவ்வாய்கிழமை)  மதுபானம் விற்பனை செய்தால், மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: