சிறுமி குறித்து சமூக வலைதளத்தில் ஆபாச பதிவு பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை:  நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் விஷ்வதர்ஷினி (38). இவருக்கு  சமூக வலைதளத்தின் மூலம் சென்னையை சேர்ந்த பெண்ணுடன் நட்பு கிடைத்தது. இருவரும் சகஜமாக கருத்துக்களை பரிமாறி வந்தனர். இந்த நிலையில், இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையை சேர்ந்த பெண்ணின் மகளான சிறுமி தொடர்பாக சமூக வலைத்தளத்தில் விஷ்வதர்ஷினி ஆபாசமாக பதிவிட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் ராயப்பேட்டை அனைத்து மகளில் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகார் மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. புகாரின் அடிப்படையில் விஷ்வதர்ஷினி மீது போக்சோ மற்றும் தகவல் தொழிநுட்ப சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விஷ்வதர்ஷினி கடந்த 2019 ஜூன் மாதம் கைதானார். இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கவிதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் விஷ்வதர்ஷினிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: