பைக் திருடியவர் கைது: 11 பைக் பறிமுதல்

சென்னை: கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் மடக்கி விசாரித்தனர். அதில், அவர் ஓட்டிவந்தது திருட்டு பைக் எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து,  அந்த வாலிபரை கூடுவாஞ்சேரி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அதில், வேளச்சேரியை சேர்ந்த கார்த்திக் (24) என்பதும், இவர் கூடுவாஞ்சேரி பகுதிகளில் தொடர் பைக் திருடி, குறைந்த விலைக்கு விற்று, அந்த பணத்தில் உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்தது.  அவரை கைது செய்து, அவரிடம் இருந்து, 11 பைக்குகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: