கஞ்சா விற்ற வழக்கில் பிரபல ரவுடி கைது

பெரம்பூர்:  கொடுங்கையூரில் 25 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கஞ்சா வழக்கில் கைது ெசய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா  பறிமுதல் செய்யப்பட்டது. கொடுங்கையூர் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்கப்படுவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று காலை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி சூர்பணங்கரை பகுதியில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தீடீர் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தார்.

அவரை பிடித்து விசாரணை செய்த போது அவரிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் புளியந்தோப்பு கன்னிகாபுரம் 8வது தெருவை சேர்ந்த தேவராஜ் (எ) கத்திக்குத்து தேவராஜ் (30)  என்பதும், இவர் மீது 2 கொலை, 3 கொலை முயற்சி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.  இதனையடுத்து தேவராஜ் இடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை ைகது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: