மெட்ரோ ரயில் நிலையங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை திறப்பு

சென்னை:  சென்னையில் புரட்சித்தலைவர் டாக்டர்  எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, வடபழனி மெட்ரோ, எழும்பூர் மெட்ரோ,  புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து மெட்ரோ மற்றும்  வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறைகள்  திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.  மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இந்த முயற்சி தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு பயண அனுபவத்தை மிகவும் இனிமையானதாக்கும். பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறைகளில் வசதியான இருக்கைகள், டயபர் மாற்றும் ஸ்லாப் மற்றும் மின்விசிறி போன்றவை கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன.

தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாலூட்டும் அறைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படுகின்றன. பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறைகள் ஏற்கனவே விமான நிலைய மெட்ரோ நிலையம் மற்றும் விம்கோ நகர் மெட்ரோ நிலையத்தில் தாய்மார்களின் பயன்பாட்டிற்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: