சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய விஜய்: வீடியோ காலில் பேசினார்

சென்னை: சிறுமி ஒருவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது குடும்பத்தாருடன் வீடியோ காலில் பேசினார் நடிகர் விஜய். சமீபத்தில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. பல்லாவரத்தை சேர்ந்த 5 வயது சிறுமி, தனது அம்மாவிடம் விஜய் அங்கிளை (நடிகர்) நான் பார்க்கணும். அவரை இங்கே வரச்சொல்லுங்க என்கிறார். அதற்கு அவரது அம்மா, அங்கிள் இங்கே எல்லாம் வர மாட்டார் என்கிறார். அதற்கு அந்த சிறுமி அவர் வரணும் என அடம் பிடிக்கிறார். இந்த வீடியோவை பார்த்த விஜய், சிறுமியின் தந்தையை பற்றி கேட்டறிந்தார். பிறகு தனது உதவியாளர்கள் மூலம் அவர்களது செல்போன் எண்ணை வாங்கி, நேற்று பேசினார். அப்போது வீடியோ காலில் விஜய் தோன்றினார். அவரை பார்த்து அந்த சிறுமி சந்தோஷம் அடைந்தாள். சிறுமியிடம் வெகு நேரம் விஜய் பேசிக்கொண்டிருந்தார். அவரது குடும்பத்தாரிடமும் பேசினார். குட்டி ரசிகைக்காக விஜய் வீடியோ காலில் பேசிய இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

Related Stories: