உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை திமுக ஆட்சியில்தான் அதிகரிப்பு: அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை: திமுக ஆட்சியில் தான் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி (அதிமுக) பேசியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் கல்வித் துறையில் மிகப்பெரிய சாதனை நடந்தது. கல்விப் புரட்சியால் 2019-20ம் ஆண்டில் தமிழகத்தில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை 51 சதவீதமாக உயர்ந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் பள்ளி கல்வித் துறையில் செயல்படுத்திய திட்டங்கள் தொடர்ந்தாலும், மடிக்கணினி திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, மாணவர்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்கப்படுவதாக சொல்லியிருக்கின்றீர்கள். 2 ஆண்டுகள் அது நடக்கவில்லை. கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும்.

அமைச்சர் க.பொன்முடி: உயர் கல்வித் துறையில், அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் சேர்க்கை விகிதம் 51.6 சதவீதம் வந்ததாகச் சொல்கிறார். அது தவறான செய்தியாகும். 2020-21ல் மொத்த சேர்க்கையே 46.9 தான். திமுக ஆட்சி வந்த பிறகு தான் 51.6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

Related Stories: