நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை மக்கள் துரத்தி அடிக்கும் நிலை ஏற்படும்: திருமாவளவன் எம்பி பேட்டி

கடலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடலூரில் நேற்று அளித்த பேட்டி: மோடி ஆட்சியில் அதானி என்ற தனி நபரை காப்பாற்ற ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையே முடக்கி போடுவது தேச விரோத செயலாகும். எதிர்க்கட்சியின் கோரிக்கையின் மீது மோடி அரசு நியாயமான நடவடிக்கை மேற்கொண்டு இருக்குமேயானால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுமதி வழங்கி இருக்க வேண்டும். வரும் ஏப்ரல் 14ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜனநாயகம் காப்போம் என்ற அறப்போராட்டத்திலும் அம்பேத்கர் சிலை முன் அமர்ந்து உறுதிமொழி ஏற்க உள்ளோம். தென்னிந்திய மாநிலங்களில் பாஜக இனி அமர முடியாது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் பாஜகவை துரத்தி அடிக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: