புத்த பூர்ணிமா தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கவுதம புத்தரின் பிறந்தநாளை புத்த மதத்தை சேர்ந்தவர்கள் புத்த பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். புத்த பூர்ணிமா நாளை பொது விடுமுறையாக அறிவிக்க கோரி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது சாத்தியம் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: