கலாஷேத்ரா பவுண்டேஷன் பாலியல் விவகாரம் தொடர்பாக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் -குமாரி

சென்னை: கலாஷேத்ரா பவுண்டேஷன் பாலியல் விவகாரம் தொடர்பாக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவ-மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து போலீஸ், கல்லூரி நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். இந்நிலையில், பாலியல் கல்லூரி நிர்வாகம் தரப்பில் இருந்தும் இதுவரை புகார் வரவில்லை எனவும் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பதில் அளித்துள்ளார். இதனையடுத்து கலாஷேத்ரா நிர்வாகம் வரும் 6ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளிடம் மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி நேரில் விசாரணை நடத்தினார்.

அதன் பிறகு விசாரணை மேற்கொண்ட நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்; விடுப்பில் இருந்த சில மாணவிகளிடம் வீடியோ காலில் பேசியதாகவும், அவர்களின் கருத்துக்களை அறிக்கையாக அரசிடம் வழங்குவேன். மாணவிகளுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கலாஷேத்ரா விவாகரத்தில் போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். 4 பேர் மீது 100 மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் அளித்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: