நீதிமன்ற சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற பின் தேவைப்படும் இடங்களில் கோயில்களில் நிதி ஆதாரத்தை பொறுத்து கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு பேச்சு

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில் “2021 ஆண்டில் 10 கல்லூரிகள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அவற்றில் 7-1-2021ம் ஆண்டு 4 கல்லூரிகள் தற்காலிக கொட்டகையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்து சமய துறைக்கு நற்பெயர் வந்துவிடக்கூடாது என சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இதனை எதிர்த்து நடைபெறக்கூடிய சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்று மீண்டும் இயங்கிவரும் 4 கல்லூரிகள் என மொத்தம் பத்து கல்லூரிகள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும். அதன் பின்னர் முத்துப்பேட்டையில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில் இடத்தில் கல்லூரி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆயிரம் ஆண்டுகள் பழமை மிகுந்த கோயில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு 100 கோடி நிதி செய்த பெருமை தமிழக அரசைச்சாரும். நீதிமன்றத்தில் உள்ள சட்ட போராட்டம் முடிவு பெற்றபின் தேவைப்படும் இடங்களில் கல்லூரிகள் துவங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: