ரோஹிணி திரையரங்க விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது: வெற்றிமாறன் காட்டம்

சென்னை: ரோஹிணி திரையரங்க விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். சிம்பு, பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம் பத்து தல. இந்த  படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. அப்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க  நரிக்குறவர்களை உள்ளே அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிறகு இந்த விவகாரம் சமூக  வலைத்தளத்தில் பரவியதால், நீண்ட நேரத்துக்கு பிறகு அந்த பெண்ணும் சிறுவர்களும் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து ரோகிணி தியேட்டர் நிர்வாகத்துக்கு எதிராக நெட்டிசன்களும் சமூக  ஆர்வலர்களும் கொதித்து எழுந்தனர்.

அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன் ரோஹிணி திரையரங்க விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என காட்டமாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்; நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: