ரூ.10 தர மறுத்தவரின் கழுத்து அறுப்பு

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை, செட்டி தெருவை சேர்ந்தவர் குமார் (40). இவர், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர், குமாரிடம் ரூ.10 கேட்டுள்ளார். நீ யாரென தெரியாது, பணம் இல்லை என கூறியுள்ளார். பின்னர் குமார் அங்கிருந்து புறப்பட்டார். அந்த நபரும், குமாரை பின் தொடர்ந்தார். திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு சென்ற குமார், அங்கிருந்த வியாபாரியிடம் ரூ.2000க்கு சில்லரை கேட்டுள்ளார். இதை பார்த்த அந்த நபர், நான் ரூ.10 தானே கேட்டேன். இல்லை என கூறிவிட்டு ரூ.2000க்கு சில்லரை கேட்கிறாய்? என்று தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த அந்த நபர், குமாரின் கழுத்தை பிளேடால் அறுத்து விட்டு தப்பினார்.  திருவல்லிக்கேணி போலீசார் விரைந்து சென்று குமாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும்  வழக்குப்பதிவு செய்து, சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த சுள்ளான் சரவணன் (32) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: