அமெரிக்காவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 9 பேர் பரிதாப பலி

போர்ட் கேம்ப்பெல்:அமெரிக்காவில் கென்டக்கியில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 9 பேர் பலியானார்கள். அமெரிக்கா விமானப்படைக்கு சொந்தமான 2 எச்எச் 60 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் நேற்று இரவு 10 மணி அளவில் கென்டக்கியின் டிரிக் கவுண்டி பகுதியில் சென்று கொண்டு இருந்தன. இந்த 2 ஹெலிகாப்டர்களும் அமெரிக்காவின் 101வது வான்படை பிரிவை சேர்ந்தவை. போர்ட்கேம்பெல்லுக்கு வடமேற்கு பகுதியில் 48 கிமீ தொலைவில் சென்ற போது 2 ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தால் 9 பேர் பலியாகி விட்டனர். அதில் சென்ற அனைவரும் ராணுவ வீரர்கள் என்பது தெரிய வந்தது.

Related Stories: