போலீஸ் வாகனம் மீது குண்டு வீச்சு பாகிஸ்தானில் 4 போலீசார் பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மார்வாட் நகரில் காவல்நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நேற்று காலை தாக்குதல் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போலீஸ் வாகனத்தில் போலீசார் விரைந்தனர். அப்போது போலீஸ் வாகனத்தின் மீதும் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவங்களில் 4 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு பாகிஸ்தான்  தலிபான்கன் பொறுப்பேற்றுள்ளனர்.

Related Stories: