கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நீதிபதி யஷ்வந்த் வர்மா கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றிய யஸ்வந்த் வர்மா இல்லத்தில் கடந்த ஆண்டு கட்டு கட்டாக பணம் இருப்பதை வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினர். இந்த நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக்கோரி 146 மக்களவை உறுப்பினர்கள் கையெழுத்தட்டு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடந்தாண்டு நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது கடிதம் வழங்கினர்.

இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட மக்களவை சபாநாயகர் யஸ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமைத்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் முடிவை எதிர்த்து நீதிபதி யஸ்வந்த் வர்மா தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தீபங்கர் தத்தா அமர்வில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி யஸ்வந்த் வர்மா கோரிக்கை யை நிராகரித்த நீதிபதிகள்,\\” ஜனவரி 24ம் தேதி விசாரணை குழுவில் ஆஜராக வேண்டும் என விசாரணை குழு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் அதில் தலையிட விரும்பவில்லை. இந்த வழக்கு தொடர்பாக வரும் 12ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: