பாஜக அதன் கூட்டணி கட்சிகளுக்கு 56 தொகுதிகள், 3 அமைச்சர் பதவிகளை கேட்கும் அமித்ஷா: எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி

டெல்லி: அமைச்சரவையில் 3 இடங்கள் பாஜகவுக்கு தேவை என்றும் அமித் ஷா கூறியதால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 56 தொகுதிகள் ஒதுக்கவும் எடப்பாடியிடம் அமித் ஷா வலியுறுத்தினார். அமித் ஷாவின் கோரிக்கையை உடனடியாக ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தார். மேலும், கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பிறகே முடிவெடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஏற்பது கூட்டணியின் வெற்றியை பாதிக்கும் என எடப்பாடி கூறியதாக தகவல் வெளியாகியது. தமிழ்நாட்டு மக்களும் கூட்டணி ஆட்சியை ஏற்க மாட்டார்கள் என அமித் ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் தெரிவித்தார்.

Related Stories: