திருச்சி சிறுகாம்பூர் அரசுப் பள்ளிக்கு வந்த ஸ்வீடன் மாணவர்கள்: அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் பண்பாட்டை பார்த்து வியப்பு

திருச்சி: திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி பண்பாடு, கற்கும் முறை மற்றும் கலை நிகழ்ச்சிகளை கண்டு ஸ்வீடன் நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் வியப்படைந்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த சிறுகாம்பூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு ஸ்வீடன் சர்வதேச உப்சலா ஜிம்மாஸ்ட் பல்கலைக்கழக மாணவர்கள் வருகை தந்தனர். மாணவர்களையும் பல்கலைக்கழக முதல்வர் கிரீடரிக் கிளண்ட் துணை முதல்வர் கரின் ஓல்சன் உள்ளிட்டோரையும் பலியின் தலைமை ஆசிரியர் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் வரவேற்றார். சர்வதேச இளம் குழந்தைகள் சமூக நல அமைப்பின் நிறுவனர் மோகன்  வணங்கினர்.

குத்துவிளக்கேற்றபட்டு அதன் பின்னர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் குடில் குறித்தும் திருக்குறளின் பெருமை குறித்தும் ஸ்வீடன் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற காலை பிராத்தனை, தமிழ் தாய் வாழ்த்து, கொடியேற்றுதல், தேசிய கீதம் பாடுதலில் உள்ள ஒழுங்கு உள்ளிட்டவற்றை ஸ்வீடன் மாணவர்கள் வியப்புடன் பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து மாணவர்களின் சிலம்பம், கரகாட்டம்,  நாட்டுப்புற பாடல், தற்காப்புக்கலை போன்ற கலை நிகழ்ச்சிகளை ஸ்வீடன் மாணவர்கள் கண்டு களித்தனர்.

அதனை தொடர்ந்து வகுப்புகளில் ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகிறார்கள் என்பது குறித்தும் மாணவர்கள் அதற்கு எவ்வாறு பதில் அளிக்கின்றனர் என்பதையும் ஸ்வீடன் மாணவர்கள் ஆர்வமுடன் கவனித்தனர். ஸ்வீடனில் உள்ள கல்வி முறை, கல்வி சூழல் மாணவர்களின் பண்பாடு குறித்து சிறுகாம்பூர் அரசு பள்ளி மாணவர்கள் கேட்டறிந்தனர். இந்த நிகழ்வில் சர்வதேச எஸ்ட்டோர இளம் மாணவர்களின் தூதுவர் மாஸ்டர் ஹர்பித், ஹர்பிதா பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Related Stories: