நெல்லையில் ஐபிஎஸ் அதிகாரி கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்..!!

சென்னை: நெல்லையில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக வெளியான சம்பவம் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் வாரிசுகளுக்கு கடலோர காவல்படை, கப்பல் மாலுமி போன்ற பணிகளில் சேர்வதற்கான 2-ம் கட்ட சிறப்பு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் சாலையில் உள்ள மெரினா காவல்நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பு பயிற்சியை தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நெல்லை ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் விசாரணைக்கு வந்த கைதிகளின் பற்களை பிடுங்கியதாக வெளியான சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். விசாரணை கைதிகளிடம் காவல் துறையினர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

இரவு ரோந்து பணியில் பணியாற்றும் காவலர்களுக்கு டார்கெட் எதுவும் கொடுக்கப்பட வில்லை என்றும் குற்றச் செயல்கள், போக்குவரத்து விதிமீறல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே காவல் துறையின் இலக்கு என்று சைலேந்திர பாபு கூறியுள்ளார். வாகனம் ஓட்டுவோர் மது அருந்தி இருக்கிறார்களா என்பதை நவீன கருவிகள் மூலமே கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: