சினிமா பைனான்சியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் கைது

சென்னை: சினிமா பைனான்சியர் போத்ராவிடம் ராஜீவ் காந்தி அறக்கட்டளை மூலமாக உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளராக இருந்த மணி மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் சார்பில் ரூ.35 லட்சம் கடனாக வாங்கினார். பின்னர் கொடுத்த பணத்தை போத்ரா கேட்டுள்ளார். அப்போது பணத்திற்காக மணி செக் கொடுத்துள்ளார். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் செக் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போத்ரா, மணியிடம் கேட்டுள்ளார்.

ஆனால் பணம் குறித்து எந்த பதிலும் முறையாக வரவில்லை. இதையடுத்து போத்ரா கடந்த 2015ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் செக் மோசடி செய்ததாக சம்பந்தப்பட்ட மணிக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால் நீதிமன்ற தீர்ப்புப்படி மணி கைது செய்யப்படவில்லை.

அதேநேரம் சினிமா பைனான்சியர் போத்ரா உயிரிழந்துவிட்டார். அதைதொடர்ந்து போத்ரா மகன் இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதைதொடர்ந்து உயர் நீதிமன்றம் செக் மோசடி வழக்கில் தொடர்புடைய மணியை கைது செய்ய உத்தரவிட்டது. தொடர்ந்து, உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் மணியை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: