யூ-டியூப் சேனல்களில் வரும் வீடியோக்களை நம்ப வேண்டாம்: தேசிய தேர்வு முகமை வேண்டுகோள்

சென்னை: ஜே.இ.இ. 2ம் கட்ட முதன்மைத் தேர்வு வருகிற 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.  சில யூ-டியூப் சேனல்களில் ஹால்டிக்கெட் வெளியிடும் தேதி குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இது போலியானது என தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முகமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ஜே.இ.இ. முதன்மைத் தேர்வுக்கான மையங்கள் இடம்பெறும் நகர் பகுதிகள் இடம்பெறும் சீட்டு மற்றும் ஹால்டிக்கெட் வெளியிடப்படும் தேதி குறித்த தகவல்கள் இருப்பதாக கூறி சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது எங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த வீடியோக்கள் போலியானவை மற்றும் தவறானவை. இதை தேசிய தேர்வு முகமை நிராகரிக்கிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் இதுபோன்று யூ-டியூப் சேனல்களில் வரும் வீடியோக்களை நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ மற்றும் உண்மையான தகவல் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் மட்டுமே வெளிவரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: