தஹி-க்கு தமிழ்நாட்டில் நஹி எப்போதும் இங்கே தயிர்தான்...அமைச்சர் நாசர் தகவல்

சென்னை: தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வார்த்தையான தஹியை பயன்படுத்த வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்திருந்தது. இதேபோல மற்ற மாநிலங்களிலும் தஹி என குறிப்பிட்டு அந்தந்த பிராந்திய மொழிகளில் அதன் பெயரை அடைப்பு குறிகளில் குறிப்பிடலாம் என கூறப்பட்டது. இந்த கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு மீண்டும் ஈடுபட்டுள்ளதாக பலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த கடிதத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் என்ற மற்ற ஹிந்தி அல்லாத மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்தார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது: தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என இந்தியில் அச்சிட வலியுறுத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஏற்க முடியாது. ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் ‘தயிர்’ என்றே தொடர்ந்து குறிப்பிடப்படும். என்று கூறினார்.

Related Stories: