ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கண்டனம் தயிருக்கு தாஹி என பெயரிட கட்டாயப்படுத்துவதா?

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ்  நேற்றுவெளியிட்டுள்ள அறிக்கை: ஆவின் உள்ளிட்ட பால் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் தயிர் உறைகளின்மீது தயிர் என்று எழுதக்கூடாது; மாறாக தாஹி என்ற இந்திச் சொல்லை எழுத வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. தயிரை தாஹி என்று அழைக்க கட்டாயப்படுத்தியது அறியாமல் நடந்தத் தவறு அல்ல; திட்டமிடப்பட்ட இந்தி திணிப்பு.

இந்தியை இந்தியாகவே திணித்தால் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால், இந்தி சொற்களை தமிழில் எழுதி திணிக்க நடுவண் அரசு முயற்சிப்பதாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள், வானொலிகள், பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் ஆகியவை வழியாக இந்தியை திணிக்க முயன்று வரும் ஒன்றிய அரசு, இப்போது தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் மூலமாகவே இந்தியை திணிக்க துடிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. எந்த வழிகளில் இந்தியை திணிக்க நடுவண் அரசு முயன்றாலும் அதை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: