சென்னை-யாங்கூன் இடையே ஏப்ரல் 1 முதல் விமான சேவை

சென்னை: சென்னை-யாங்கூன் இடையே வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் வாராந்திர நேரடி விமான சேவை தொடங்குகிறது. மியான்மர் நாட்டின் யாங்கூன்-சென்னை-யாங்கூன் இடையே நேரடி விமான சேவையை துவங்க, அந்நாட்டின் மியான்மர் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் யாங்கூன்-சென்னை-யாங்கூன் இடையே வாராந்திர நேரடி விமான சேவை துவங்கப்படுகிறது. இதை தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை யாங்கூனில் இருந்து புறப்படும் விமானம் சென்னை வந்துவிட்டு, அன்றைய தினமே யாங்கூனுக்கு புறப்பட்டு செல்லும்.

பின்னர் இந்த விமான சேவைக்கு பயணிகளிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, வாரத்தில் மேலும் சில நாட்களுக்கு விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது. மியான்மர் நாட்டின் யாங்கூனில் இருந்து ஏற்கனவே இந்தியாவின் புதுடெல்லி, கொல்கத்தா, பீகார் மாநிலத்தில் கயாவுக்கு நேரடி விமான சேவை இயங்கி வருகிறது. தற்போது சென்னைக்கு நேரடி விமான சேவை துவங்கப்படுகிறது.

இந்த விமானம் யாங்கூனில் இருந்து சென்னைக்கு எத்தனை மணிக்கு வந்து, பின்னர் எப்போது திரும்பி செல்லும் என்ற கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும். ஏற்கனவே வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து சென்னைக்கு யுஎஸ் பங்களா ஏர்லைன்ஸ் நிறுவனம் வாரத்தில் 4 நாட்கள் நேரடி விமானங்களை இயக்கி வந்தது. தற்போது, பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், கடந்த 26ம் தேதி முதல் தினசரி நேரடி விமான சேவையாக டாக்கா-சென்னை-டாக்காவுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: