ரேஷன் கடைகளில் கதர், பட்டு, கருப்பட்டி, தேன் விற்க நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மடத்துக்குளம் எம்எல்ஏ சி.மகேந்திரன் (அதிமுக) பேசுகையில், உடுக்கம்பாளையம், சின்னபொம்மன்சாலை, உள்ளிட்ட பகுதிகளில் நெசவாளர்கள் மற்றும் குறு, சிறு தொழில்முனைவோர்கள் அதிகளவில் உள்ளனர். கதர், கைத்தறி மற்றும் துணிநூல் துறையின்கீழ் புதிய கதர் நூல் நூற்பு நிலையம் அமைத்துத் தர அரசு முன்வருமா என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசுகையில் கூறியதாவது: ‘‘மடத்துக்குளம் பேரூராட்சிக்கு கதர் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வழங்கப்படும்.

அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கதர் பொருட்கள் விற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கதர், பட்டு, தேன், கருப்பட்டி மற்றும் பல்வேறு பொருட்கள், இப்போது நீரிழிவு நோய் அதிகமாக இருப்பதால் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி கேட்கிறார்கள். இவற்றையெல்லாம் விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். அந்த அடிப்படையில் உங்கள் கிராமங்களிலுள்ள நியாய விலைக் கடைகளில் கொண்டு சென்று விற்பனை செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறினார்.

Related Stories: