நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ. 78.58 லட்சம் மதிப்பீட்டில் 830 எல்இடி மின்விளக்குகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.78,58,200 மதிப்பீட்டில் 30 வாட்ஸ் திறன் கொண்ட 830 எல்.இ.டி. விளக்குகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.  சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு கருதி நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்ட மண்டலங்களான 1, 2, 3, 7, 11, 12, 14 மற்றும் 15 ஆகிய வளர்ச்சியடைந்த பகுதிகள், காவல் துறையினரால் கண்டறியப்பட்ட பகுதிகள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மையப்பகுதிகளில் புதியதாக தெருவிளக்கு மின்கம்பங்கள் அமைத்தல் மற்றும் அதில் எல்.இ.டி. மின் விளக்குகள் அமைத்தல் பணிகளும்,  சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள துருப்பிடித்த மற்றும் பழுதான தெரு விளக்கு மின்கம்பங்களை மாற்றி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில், நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.71,23,400 மதிப்பீட்டில் பெருங்குடி மண்டலம், வார்டு-186க்குட்பட்ட புழுதிவாக்கம்  ஏரி மற்றும் வார்டு-187க்குட்பட்ட ஐயப்பா நகர் ஏரி ஆகிய பகுதிகளில் 6 மீட்டர் உயர 137 மின்கம்பங்கள், 48 வாட்ஸ் திறன் கொண்ட 135 எல்.இ.டி.விளக்குகள் மற்றும் 100 வாட்ஸ் திறன் கொண்ட 2 அதிக வெளிச்சம் தரும்  விளக்குகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.  இதனைத் தொடர்ந்து, நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.78,58,200 மதிப்பீட்டில் பெருங்குடி மண்டலம், வார்டு-184க்குட்பட்ட கல்லுக்குட்டை குடிசைப் பகுதிகளில் உள்ள 182 தெருக்களுக்கு தமிழ்நாடு மின்வாரிய மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள 30 வாட்ஸ் திறன் கொண்ட 830 எல்.இ.டி. மின்விளக்குகளை திருவள்ளுவர் நகர், கல்லுக்குட்டை பகுதியில் நேற்று  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் அவர்கள், துணை மேயர் மகேஷ் குமார், நிலைக்குழுத் தலைவர் (கல்வி) பாலவாக்கம் விசுவநாதன், பெருங்குடி மண்டலக்குழுத் தலைவர்

ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: