வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது: 700 கிராம் பறிமுதல்

பெரம்பூர்:  வியாசர்பாடி பகுதியில் இரவு நேரங்களில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் குணசேகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் வியாசர்பாடி பி.கல்யாணபுரம் 2வது தெரு பகுதியில் வியாசர்பாடி போலீசார் தீடீர் சோதனை செய்தனர். அப்போது ரிஷி கிருஷ்ணன் (30) என்பவரது வீட்டில் சிறுசிறு கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. அந்த வீட்டிலிருந்து சுமார் 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், ரிஷிகிருஷ்ணன் கொடுங்கையூரைச் சேர்ந்த ரூபேஷ் என்பவரிடம் கஞ்சாவை வாங்கி, அதனை வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விற்றது தெரியவந்தது. இதனையடுத்து ரிஷிகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* அண்ணா நகர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையில் போலீசார், வில்லிவாக்கம் திருவிக நகரில் உள்ள பார்க் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் பையுடன் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து, அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, கஞ்சா இருந்தது. விசாரணையில், அமைந்தகரை பி.பி.தோட்டம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (33) என்பதும்,   ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து,  விற்பனை செய்ததும், இவர்மீது, ஏற்கனவே 2020ல் அண்ணாநகர் காவல்நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில்  இருப்பதும் தெரியவந்தது.  இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: