சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?

புதுடெல்லி: ராகுல் காந்தி  விவகாரத்தில் ஒருதலை பட்சமாக  செயல்பட்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீது வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர  எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன ராகுலின் எம்பி. பதவி பறிப்பு தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் ஒருதலை பட்சமாகவும் அவசர கதியிலும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நடந்து கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகளின்  ஆலோசனை கூட்டத்தில், சபாநாயகர் ஓம் பிர்லா மீது ஏப்ரல் 3ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி எம்பி.க்கள் கலந்து ஆலோசித்ததாக  அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: