மாமல்லபுரம் கடற்கரை அருகே கேட்பாரற்று கிடந்த மர்ம சூட்கேஸ்: நள்ளிரவில் பரபரப்பு

மாமல்லபுரம்:  மாமல்லபுரம், கருங்குழி அம்மன் கோயில் தெருவில் கடற்கரைக்கு அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு மர்ம சூட்கேஸ் ஒன்று பல மணிநேரமாக கேட்பாரற்று கிடந்தது. தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கேட்பாரற்று கிடந்த சூட்கேசை காவல் நிலையம் கொண்டு சென்றனர். அந்த மர்ம சூட்கேஸில் வெடிகுண்டு இருக்குமோ என அச்சம் ஏற்பட்டது.

இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் முன்னிலையில், ஒருவித பயத்துடனே சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் பழைய குடை, பெயர் தெரியாத  ஒருவருடைய இறப்பு சான்றிதழ், சீப்பு, கண்ணாடி, நோட்டு-புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. விசாரணையில், ஊர் பெயர் கூட சொல்லத்தெரியாத சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குட்கேஸ் என்பது தெரியவந்தது. போலீசார், அந்தப் பெண்ணை வரவழைத்து சூட்கேசை ஒப்படைத்தனர்.

Related Stories: