பற்களை ஏஎஸ்பி பிடுங்கிய விவகாரம் 6 வாரங்களில் அறிக்கை அளிக்க ஐஜிக்கு உத்தரவு: மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நெல்லை:நெல்லை  மாவட்டம், அம்பை அருகே விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் அடிப்படையில் அம்பை ஏஎஸ்பி  பல்வீர்சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி  டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து அம்பை டிஎஸ்பியாக நெல்லை  மாவட்ட குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு பிரிவு டிஎஸ்பி வெங்கடேசன் கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார். இது தொடர்பாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குபதிந்து, மாநில மனித உரிமை ஆணைய ஐஜி விரிவான விசாரணை நடத்தி 6 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

Related Stories: