அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்: பேக்சியா சங்கம் அறிவிப்பு

சென்னை: அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்குபெற மாட்டோம் என்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் அசோசியேசன் அறிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் அசோசியேசன் (பேக்சியா) சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையை தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்தி, கூட்டுறவு நிறுவனங்களையும், செம்மைப்படுத்தி உடனுக்குடன் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றி கூட்டுறவு பணியாளர் நலன் காக்க செயல்பட்டு வரும் வேளையில் ஒரு சில தொழிற்சங்கங்கள் சென்ற ஆட்சிக்காலத்திலும், இப்போதும்  பணியாளர்களிடம் பல்வேறு வகையில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து தங்களின் சுயநலத்திற்காகவும், தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் அரசுக்கு எதிராக இடையூறு செய்ய மேற்ெகாள்ளும் தேவையற்ற பேரணி, வீண் போராட்டங்களில் பேக்சியா சங்கம் கலந்துகொள்ளாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: