மானியக்கோரிக்கை மீது இன்று முதல் விவாதம்

சென்னை: துறைரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் இன்று தொடங்க உள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நேற்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை  துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை அளித்து பேசினர். மேலும் 2023-24ம் ஆண்டு செலவினத்திற்கான முன்பண மானியக்கோரிக்கையும், கூடுதல் செலவிற்கான மானியக்கோரிக்கையும் பேரவையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் துறை ரீதியாக மானியக்கோரிக்கை விவாதம் இன்று தொடங்க உள்ளது. முதலாவதாக இன்று காலையில் நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும்  திறன் மேம்பாட்டு துறை மானியக்கோரிக்கை நடக்கிறது.

விவாதத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளித்து துறை சார்ந்த அமைச்சர்களான துரைமுருகன், சி.வீ.கணேசன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவர். மாலையில் போக்குவரத்து மானியக்கோரிக்கை விவாதம் நடக்கிறது. அமைச்சர் சிவசங்கர் விவாதத்திற்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். நாளை உள்ளாட்சி, ஊரக வளர்ச்சி துறையும், 31ம் தேதி உயர்கல்வி, பள்ளிக்கல்வி துறையும், 1ம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக்கோரிக்கையும் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 21ம் தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.

Related Stories: