அமைச்சர் தகவல் அரசு நூலகங்களில் வைபை வசதி

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பேசுகையில், அந்தியூர் பகுதியில் நூலகத்தில் வைபை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படுமா? என்றார். இதற்கு பதில் அளித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘‘போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்காக அரசு  நூலகங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டமாக 500 நூலகங்களில் வைபை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக அனைத்து அரசு நூலகங்களுக்கும் வைபை வசதிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

Related Stories: