அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் 29 மாவட்ட பூமாலை வளாகம் ரூ.6.16 கோடியில் புனரமைப்பு

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் குளித்தலை இரா.மாணிக்கம்(திமுக) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்கின்ற அந்தப் பொருட்களை நகர்புறங்களில் சந்தைப்படுத்தி விற்பனை செய்ய ஏற்றவகையில், கலைஞர் 2000ம் ஆண்டு மாவட்ட தலைமையகங்களில் வணிக வளாகங்களை நிறுவி, அதற்கு பூமாலை வணிக வளாகம் என்று பெயரிட்டார். 2021ம் ஆண்டு திமுக அரசு அமைந்த பின்பு, 29 மாவட்ட பூமாலை வளாகங்கள் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 6 கோடியே 16 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. நான் தொடர்ந்து எந்த மாவட்டத்திற்கு ஆய்வுக்கு செல்கின்றபோதும், பூமாலை வளாகத்திற்குச் சென்று, அதனை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றேன். உறுப்பினர் குறிப்பிட்ட கரூர் மாவட்ட பூமாலை வளாகமும் இதில் அடங்கும். இவ்வணிக வளாகங்கள் அனைத்தும் ஒரே வண்ணம் பூசப்பட்டு, முதல்வரால் வருகின்ற மே மாதம் இறுதிக்குள் திறந்து வைக்கப்பட்டு, சுய உதவிக் குழுக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்’’ என்றார்.

Related Stories: