சம்பள பாக்கி தொடர்பான விவகாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே சமரசம்!

சென்னை: சம்பள பாக்கி தொடர்பான விவகாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே சமரசம் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்ததற்கு ரூ.4 கோடி சம்பள பாக்கி உள்ளதாக ஞானவேல் ராஜாவுக்கு எதிராக வழக்கு போடப்பட்டுருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருதரப்பினரும் சமரசம் ஏற்படுத்திக் கொள்வதாக ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: