பழனி மலையடிவாரத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ரவுடி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர். பழனி மலையடிவாரத்தில் வியாபாரம் செய்வதில் இரண்டு பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த ரவுடி காளிதாஸ் மதுபோதையில் கையில் குச்சியுடன் தகராறில் ஈடுபட்டதுடன் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது குறித்த வீடியோ வைரலானது.  இதனை தொடர்ந்து பழனி அடிவாரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி காளிதாஸை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: