தெற்கு இங்கிலாந்தில் துறைமுகப் பகுதியில் எண்ணெய் கசிவு: கடலில் மிதக்கும் எண்ணெய் திட்டுகளை அகற்றும் பணி தீவிரம்

இங்கிலாந்து: தெற்கு இங்கிலாந்தில் உள்ள துறைமுகப் பகுதியில் கடலில் எண்ணெய் திட்டுகள் நிறைந்திருக்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. தெற்கு இங்கிலாந்தில் ஆங்கிலோ- பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான பெபரென்கோவின் டோர்செட் என்ற இடத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து லேசான அளவு கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடலில் எண்ணெய் திட்டுகள் நிறைந்து இருப்பதை ட்ரோன் மூலம் படம் பிடிக்கபட்டுள்ளது. 200பேரல் அளவு எண்ணெய் கடலில் கலந்துள்ளதாக தெரிவித்துள்ள எண்ணெய் நிறுவனம் கசிவு முழுமையாக கட்டுப்படுத்த பட்டுள்ளதாக கூறியுள்ளது. கடலில் கலந்துள்ள எண்ணெய் திட்டுகளை முழு வீச்சில் அகற்றி வருவதாகவும் மக்கள் கடற்கறைக்கு செல்வதை தவிர்க்கும் மாறும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories: