கச்சத்தீவில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேற எந்த மத வாழிபாட்டு தளமும் இல்லை: இலங்கை கடற்படை விளக்கம்

கொழும்பு: கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேற எந்த மத வாழிபாட்டு தளமும் இல்லை என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு பகுதி இலங்கை அரசிடம் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் அந்தோணியார் ஆலய திருவிழாவில் இருநாட்டு மீனவர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அந்தோணிய ஆலய திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்று திரும்பிய நிலையில், புதிதாக புத்தர் சிலைகளை இலங்கை கடற்படை நிறுவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு கச்சத்தீவில் வேறு எந்த சிலையோ அல்லது மத நினைவு சினத்தை அமைக்கும் எண்ணம்

கடற்படைக்கு இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் பௌத்த சங்கத்தின் அனுசரணையின் கீழ் கட்டப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தை பாதுகாப்பு கடமைகளுக்கு மேலதிகமாக கடற்படையினர் கவனித்து வருகின்றனர்.

கச்சத்தீவு தேவாலய திருவிழாவைத் தவிர, வருடத்தின் மற்ற நாட்களில், கடற்படையினர் தேவாலய வளாகத்தை சுத்தம் செய்து, தேவாலயத்துடன் தொடர்புடைய அனைத்து சடங்குகளையும் மிகுந்த பக்தியுடன் செய்வதாக கடற்படை தெரிவித்துள்ளது. கச்சத்தீவு கடற்பரப்பில் உள்ள கடற்படை வீரர்கள் பெரும்பாலானவர்கள் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் அங்கு உள்ள சிறிய புத்தர் சிலையை வணங்குவதாக அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: