ரூ.12 கோடி லஞ்சம்: சிஎம்டிஏ அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் காக்னிசண்ட் நிறுவனம் கட்ட ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011-2016 காலகட்டத்தில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அடுக்குமாடி அலுவலகம் கட்ட திட்ட அனுமதி வழங்க சிஎம்டிஏ அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. 2013-ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு காலம் தாழ்த்தப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்போதைய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வேண்டும் என்றே காலம் தாழ்த்தியது லஞ்சம் பெறுவதற்கு காரணமாக அமைந்தது. அதன் அடிப்படையில் சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் காக்னிசண்ட், எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories: