சென்னை பெரம்பூரில் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை: 5 பேர் கைது: 5 பட்டா கத்திகள் பறிமுதல்..!

சென்னை : சென்னை பெரம்பூரில் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்து 8-க்கும் மேற்பட்ட கும்பல் இளங்கோவனை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே இளங்கோவன் உயிரிழந்த நிலையில் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.சென்னை பெரம்பூர் அதிமுக பிரமுகர் இளங்கோவன் (48) வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், சஞ்சய் (19), கணேசன் (23), வெங்கடேசன் (30), அருண்குமார் (28), சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு ஒரு ஆட்டோ, 5 பட்டா கத்திகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: