போலி ரசீது தயாரித்து ரூ.18 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை  கிராஸ் ரோட்டைச் சேர்ந்தவர் அஜீஸ் குப்தா (32). இவர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கணேஷ் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் கோத்ரேஜ் நிறுவனத்தில் இருந்து வீட்டு உபயோக பொருட்களை வாங்கி, விற்பனை செய்து வருகிறார். இந்த நிறுவனத்தில் வேலை பார்த்த திருவொற்றியூர் மஸ்தான் கோயில் தெருவைச் சேர்ந்த விஜயசாரதி (35), புது வண்ணாரப்பேட்டை ராம அரங்கனல் தெருவைச் சேர்ந்த நாகராஜ் (35) ஆகியோர் போலி ரசீது  கொடுத்து ரூ.18 லட்சத்து 83 ஆயிரத்தை கடந்த வருடம் டிசம்பர் மாதம் மோசடி செய்துள்ளனர்.

கணக்கு பார்த்தபோது இந்த விவரம் அஜீஸ் குப்தாவுக்கு தெரிய வந்தது. அதன்பேரில் கடை உரிமையாளர் அஜீஸ்குப்தா புது வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவொற்றியூர் பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் தனிப்படை போலீசார், நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: