தொண்டர்கள் 100 பேருடன் பாஜவில் இணைந்த அமமுக பிரமுகர்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் தொண்டர்கள் 100 பேருடன் அமமுக பகுதிச் செயலாளர் பாஜவில் இணைந்தார். திருவொற்றியூர் மேற்கு பகுதி அமமுக பகுதிச் செயலாளராக இருந்தவர் பிளாஸ்டிக் கே.ஏ.குப்பன். இவர் முன்னாள் அதிமுக கவுன்சிலர். தற்போது அந்த கட்சியில் இருந்து விலகி 100 தொண்டர்களுடன் பாஜவில் இணைந்துள்ளார்.

திருவொற்றியூர் வன்னியர் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜ நிர்வாகிகள் கரு.நாகராஜன், வழக்கறிஞர் பால் கனகராஜ், மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார், பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலையில் கே.ஏ.குப்பன் மற்றும் அமமுக தொண்டர்கள் பாஜவில் இணைந்தனர்.

Related Stories: