திருப்புத்தூர் அருகே தாய், மகன் அடித்துக் கொலை

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே தாய், மகன் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சி புதுவளவை சேர்ந்தவர் அடைக்கி (46). கூலித்தொழிலாளி. கணவர் இறந்துவிட்டதால், மகன் சின்னக்கருப்பனுடன் (26) 20 வருடங்களாக துவார் பூமலர்ச்சி கண்மாய் பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டின் முன் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவரையும் கட்டையால் கொடூரமாக தாக்கினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நேற்று காலை வீட்டின் முன்பு தாய், மகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து டிஐஜி துரை, சிவகங்கை எஸ்பி செல்வராஜ் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து நெற்குப்பை போலீசார் வழக்குப்பதிந்து, கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்று விசாரித்து வருகின்றனர்.

Related Stories: