இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: 29 வகையான சீர் வரிசை பொருட்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, குடும்ப சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து, தகுதியான 6 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டன. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன் தலைமையில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி ஆகியோர் முன்னிலையில், காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில் மண்டபத்தில், அந்த 6 ஜோடிகளுக்கு, பட்டுச்சேலை, பட்டுவேட்டி, கைக்கடிகாரம், தங்க தாலி ஆகியவற்றை வழங்கங்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. பின்னர், திருமணம் செய்துகொண்ட 6 ஜோடிகளுக்கும், ரூ.75 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 29 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இத்திருமண விழாவில், அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வி, கோயில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், முத்துலட்சுமி, கோயில் ஆய்வாளர் பிரித்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories: